குரூப் 16 - கோத்தா நாளை சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Monday, 11 June 2018

குரூப் 16 - கோத்தா நாளை சந்திப்பு!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குரூப் 16 உறுப்பினர்கள் - கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் கோத்தபாய ராஜபக்ச இடையிலான சந்திப்பொன்று நாளை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வர்த்தக மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் அரசியல் குழுக்களையும் தொடர்ச்சியாக சந்தித்து வரும் கோத்தபாய தன்னை தேர்தலுக்குத் தயாராக்கி வருகிறார்.

எனினும், மஹிந்த ராஜபக்சவே இறுதி முடிவை எடுப்பார் எனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment