கண்டி: மாற்றுத்திறனாளிகளுக்கு நோன்புப் பெருநாள் பரிசுகள் - sonakar.com

Post Top Ad

Monday, 11 June 2018

கண்டி: மாற்றுத்திறனாளிகளுக்கு நோன்புப் பெருநாள் பரிசுகள்


கண்டி வை. எம். எம். ஏ. கிளையினரின் ஏற்பாட்டில் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அனாதைச் சிறார்களுக்கும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக புத்தாடைகள்,  பரிசுப்பொருட்கள் வழங்கி வைக்கின்ற நிகழ்வு கண்டி வை. எம். எம். ஏ. அலுவலகத்தில் தலைவர் கஸாலி தலைமையில் 10-06-2018 இடம்பெற்றது. 


மற்றுமொரு விசேட அம்சமாக இந்நிகழ்வில் கண்டி அமெரிக்கன் கோணர் நிலையத்தில் பணிபுரியும் சிங்கள, தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் இன நல்லிணக்கத்தைக் கருத்திற் கொண்டு  மாற்றுத் திறனாளிகளுக்கு நோன்புப் பெருநாள் பரிசுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். டி. முத்தலிப், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்க முன்னாள் தலைவர்களான இஸ்மாயீல், மன்சூர். கணக்காளர் முபாரக் மற்றும் வை. எம். எம். ஏ. இயக்கத்தின் அதிகாரிகளான ரிசான உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-இக்பால் அலி


No comments:

Post a Comment