இனக்குரோதத்தைத் தூண்டும் 'வீரகேசரி'! - sonakar.com

Post Top Ad

Saturday, 16 June 2018

இனக்குரோதத்தைத் தூண்டும் 'வீரகேசரி'!


இணைய ஊடக வளர்ச்சிக்கு முகங்கொடுக்க முடியாது திணறிக்கொண்டிருக்கும் பத்திரிகைததுறை அண்மைக்காலமாக மலினமான முறையில் தலைப்புச் செய்திகளை வெளியிட்டு அதன் மூலம் இனக்குரோதத்தைத் தூண்டி வருகின்றன.

அந்த வகையில் தினக்குரலையடுத்து இன்று வீரகேசரியும் அவ்வாறான மட்டமான செயலில் ஈடுபட்டுள்ளது.

சந்தியா எக்னலிகொட எனும் துணிச்சலான பெண்ணின் போராட்டத்தை மலினப்படுத்தியுள்ள வீரகேசரி, ஞானசாரவின் கைது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட பெருநாள் பரிசு என தலைப்பிட்டு தனது இனவிரோத நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

வழக்குப் பதிவு செய்த நாள் முதல் அனைத்து துன்பங்களையும் எதிர்கொண்டு, உயர் மட்ட பௌத்த துறவிகளின் அழுத்தத்தையும் மீறி ஞானசாரவுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதில் முனைப்பாக இருந்த ஒரு விதவைப் பெண்ணின் போராட்டத்தை மலினப்படுத்தும் அளவுக்கு வீரகேசரியின் ஊடக தர்மம் தரம் தாழ்ந்திருப்பது கண்கூடு.


தமிழ் ஊடகங்கள் என சொல்லிக் கொள்ளும் தினக்குரல், சக்தி மற்றும் வீரகேசரி என அனைத்து நிறுவனங்களும் இவ்வாறே முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவது தொடர்கின்றமை தொடர்பில் முற்போக்கு சக்திகள் கவனம் செலுத்துவது அவசியப்படுகிறது.

இந்நிலையில், இன்றைய தலைப்பு குறித்து பதிலளித்த வீரகேசரி தலைமையாசிரியர், நாளை திருத்த முடியாது எனவும் திங்கட்கிழமை இத்தவறை திருத்திக் கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவிக்கிறார். திருத்தப்படுவதை விட தவிர்த்திருக்க வேண்டியது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

- சோனகர்.கொம்

No comments:

Post a Comment