பணம் பெற்றவர்கள் 'பட்டியல்' என்று ஒன்றில்லை: சபாநாயகர்! - sonakar.com

Post Top Ad

Thursday, 7 June 2018

பணம் பெற்றவர்கள் 'பட்டியல்' என்று ஒன்றில்லை: சபாநாயகர்!


மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கையில் அர்ஜுன் அலோசியசிடம் பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் என்று ஒன்றில்லையென விளக்கமளித்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.அதேபோன்று, நேற்றைய தினம் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தது போன்று 24 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாவலர்கள் விசாரிக்கப்படவும் இல்லையென பொலிஸ் மா அதிபர் உறுதியாகத் தெரிவித்துள்ளதாகவும் அவையனைத்து ஊகங்களே எனவும் சபாநாயகர் சபையில் வைத்து இன்று தெரிவித்துள்ளார்.

118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அர்ஜுன் அலோசியசிடம் பணம் பெற்றுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வந்த நிலையில் இவ்விவகாரம் பேசு பொருளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment