சுதந்திரக் கட்சிக்கு 'தற்காலிக' நிர்வாகம்; துமிந்த நீக்கம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 3 June 2018

சுதந்திரக் கட்சிக்கு 'தற்காலிக' நிர்வாகம்; துமிந்த நீக்கம்!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்காலிகமாக புதிய நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று காலை ஜனாதிபதியும் கட்சித் தலைவருமான மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எதிர்வரும் ஒன்றரை மாதங்களுக்கான தற்காலிக நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை துமிந்த திசாநாயக்க தானாக விலகிக் கொண்டுள்ளதாக மைத்ரி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, பொருளாளராக எஸ்.பி. திசாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுஇ.

No comments:

Post a Comment