நிரூபித்தால் பதவி விலகுவேன்: சுஜீவ - sonakar.com

Post Top Ad

Friday, 8 June 2018

நிரூபித்தால் பதவி விலகுவேன்: சுஜீவ


அலோசியசின் நிறுவனத்தில் இருந்து நேரடியாகத் தான் பணம் பெற்றது நிரூபிக்கப்படுமானால் பதவி விலகத் தயார் என தெரிவிக்கிறார் சுஜீவ சேனசிங்க.அலோசியஸ் நிறுவன குழுமத்தின் மென்டிஸ் நிறுவனத்திடமிருந்து சுஜீவ சேனசிங்கவுக்கு 3 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் அது தனது அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் எனவும் அதையும் ஏதாவது தொண்டு நிறுவனத்துக்கு வழங்கத் தயார் எனவும் அவர் சுஜீவ தெரிவிக்கிறார்.

இதேவேளை, அலோசியசின் பணம் தனது பிரச்சாரத்துக்கு பயன்பட்டதாக தகவல் வெளியானதும் தான் சில நிமிடங்களில் அதிர்ச்சியில் உறைந்ததாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment