ஏழு பள்ளிவாசல்களை மூடும் அவுஸ்திரிய அரசு - sonakar.com

Post Top Ad

Friday 8 June 2018

ஏழு பள்ளிவாசல்களை மூடும் அவுஸ்திரிய அரசு



தமது நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைய செயற்படவில்லையென குற்றஞ்சாட்டி சுமார் ஏழு பள்ளிவாசல்களை மூடுவதோடு நாற்பதுக்கு மேற்பட்ட மார்க்க அறிஞர்களை நாட்டை விட்டு வெளியேற்றப் போவதாக அறிவித்துள்ளது அவுஸ்திரிய அரசு.



அராப் சமய விவகார சங்கம் எனும் அமைப்பின் கீழ் இயங்கும் ஆறு பள்ளிவாசல்கள் உட்பட ஏழு பள்ளிவாசல்களே இவ்வாறு மூடப்படவுள்ளதுடன் வெளிநாட்டு நிதியுதவியில் சமய நிறுவனங்கள் இயங்கக்கூடாது எனும் விதி முறை மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்நாட்டில் சுமார் 6 இலட்சம் முஸ்லிம்கள் குடியிருப்பதோடு பெரும்பாலானவர்கள் துருக்கிய பின்புலத்தைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment