கோத்தா 'ஜனாதிபதியாவதற்கு' தடையில்லை: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 June 2018

கோத்தா 'ஜனாதிபதியாவதற்கு' தடையில்லை: கம்மன்பில


கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரது அமெரிக்க பிரஜாவுரிமை தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றமை ஒரு பொருட்டேயில்லையென தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.


வேறு நாடொன்றின் பிரஜாவுரிமையைப் பெற்ற நிலையில் அமெரிக்க பிரஜாவுரிமையைக் கை விடுவதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அமெரிக்காவில் இருந்து கொண்டு வேறு குடியுரிமையின்றி விண்ணப்பிப்பதே முடியாத காரியம் எனவும் கம்மன்பில தெரிவிக்கிறார்.

இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக பதவி வழங்கும் நிமித்தம் இரவோடிரவாக கோத்தபாயவுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டதாக நம்பப்படுகின்ற நிலையில் அமெரிக்கா கோத்தாவின் பிரஜாவுரிமையை விரைவாக இரத்து செய்யாது என கருத்து வெளியிடப்பட்டு வருகிறது.

எனினும், கோத்தா தன்னைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment