காதர் மஸ்தானுக்கு பிரதியமைச்சர் பதவி! - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 June 2018

காதர் மஸ்தானுக்கு பிரதியமைச்சர் பதவி!


மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக வன்னி மாவட்ட ஸ்ரீலசுக நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவினால் இன்று  நியமிக்கப்பட்டுள்ளார்.


இன்றைய தினம் இடம்பெற்ற ராஜாங்க  மற்றும் பிரதியமைச்சர்கள் நியமனத்தின் போதே மஸ்தானுக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் பிரதி சபாநாயகர் பதவிக்குப் போட்டியிட்ட அங்கஜன் ராமநாதனுக்கு விவசாயத்துறை பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment