பேராதெனிய: காணாமல் போன சவுதி பெண்ணைத் தேடி நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 June 2018

பேராதெனிய: காணாமல் போன சவுதி பெண்ணைத் தேடி நடவடிக்கை


பேராதனை, கன்னோருவ வீதி பகுதி,  மஹாவலி கங்கையில் இன்று 20 ம் திகதி  மாலை  இடம் பெற்ற  படகு விபத்து ஒன்றில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் காணாமற் போயுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.


சவுதி அரேபியாவை சேர்ந்த எட்டு சுற்றுலா பயணிகள்  மஹாவலி கங்கையில் பயணித்த படகு கன்னோருவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி உள்ளது.


இவ்வேளையில் அதில் ஐந்து ஆண்களும் மூன்று பெண்களும் இருந்ததாகவம் ஏழுபேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காணாமற் போயுள்ள அப்பெண்ணை தேடும் நடவடிக்கையில் பொலீஸார் மற்றும் கடற் படையினர் இன்று  20ம் திகதி இரவு வேளையிலும்  ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

-மொஹொமட் ஆஸிக்

No comments:

Post a Comment