ரமழான்: ஆடைச் சுதந்திரமும் வர்த்தக மாபியாக்களும் - sonakar.com

Post Top Ad

Friday 1 June 2018

ரமழான்: ஆடைச் சுதந்திரமும் வர்த்தக மாபியாக்களும்


புனித ரமழான் மாதம் நம்மை விட்டுப் பிரிவதற்கு இன்னும் இரு வாரங்களே எஞ்சியிருக்கிறது. இந்நிலையில், ஈகைத் திருநாளான பெருநாளை எதிர்பார்த்தவர்களாக, அவற்றுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்பவர்களாக நோன்பு நோற்றவர்களும், நோற்காதாவர்களும் ஏற்பாட்டுக்களத்தில் இறங்கியிருப்பதை முஸ்லிம்கள் செறிந்து வாழும் நகர மற்றும் கிராமப்புற  ஜவுளிக்கடைகளை அவதானிக்கின்றபோது புரிய முடிகிறது.


பெருநாள் தினத்திற்கான ஆடைத் தெரிவுகளுக்காக கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் வணக்க வழிபாடுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதிகமாக அமையப்பெறுவது கண்களால் காணும் காட்சிகளாகும். புனித மாதத்தின்  இரவுகளையும், பகல்களையும் இறைவணக்க வழிபாடுகளில் கழிக்க வேண்டுமென அறிந்தும,; அவை பற்றி அறிவுறுத்தப்பட்டும் கூட, அவை கருத்திற் கொள்ளப்படாது இம்மாதத்தின் சிறப்புமிக்க நேரங்கள்; ஜவுளிக் கடைகளிலும், தெருக்களிலும் பாழ்படுத்தப்படுவதும் வழமையானவை.

ரமழானின் 27ஆம் இரவில் மட்டும் பள்ளிவால்களை நிரப்பி பிராhத்தனைகளில் ஈடுபட்டால் சுவர்கம் கிடைத்து விடும் என்ற நினைப்பில் வளர்ந்தவர்களும், இளைய தலை முறையினரும் ரமழான் மாதத்தின் இரவுகளையும,; பகல்களையும வீண் விளையாட்டுக்களிலும், பேஸ்புக், வட்சப் போன்ற சமூகவலைத்தளப் பாவனைகளிலும்;  வீணாக்கிக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது.

இந்நிலையில், ஆபாசத்தை ஆடையின் வடிவில் சந்தைப்படுத்துவதற்கு ஒரு சில ஆடை வடிவமைப்பாளர்களும், விற்பனையாளர்களும் விளம்பரத்திற்கு மேல் விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவ்வாறான ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டும் காணப்படுகின்றன. 

அவற்றிற்கு மேலாக, ஆடை அணியும் விடயத்தில் இஸ்லாம் வகுத்துள்ள சட்ட வரம்பை மீறி, அங்க அசைவுகளை வெளிப்படுத்தும் இறுக்கமான ஆடைகளை அணிந்துகொண்டு, அணிந்துள்ள ஆடையை விட மேலும் இறுக்கமான ஆடைகளை தெரிவு செய்வதற்காக ஒரு சில சகோதரிகள்; தனிமையாகவும், காவலர்கள் உடனும்  ஜவுளிக்கடைகளில் அலைமோத ஆரம்பித்திருக்கிறார்கள். 

இஸ்லாமிய கலாசாரத்திற்கு ஏற்ற ஆடைகளைத் தெரிவு செய்து அணிகிறோம், அபாயாக்களைத் தெரிவு செய்கிறோம் என்ற பெயரில் சில  யுவதிகள் ஆடையணிந்தும் ஆடையில்லாதவர்களாகக் காட்சியளிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சில இளைஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. 

இஸ்லாத்தின் வரையறையில் ஆடைகள்

இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் ஆடை மிகப் பெரும் அருட்கொடையாகும். ஆடை மட்டும் இல்லாதிருந்தால் மனிதனுக்கும் ஏனைய மிருகங்களுக்கும்  வித்தியாசமின்றி போயிருக்கும். 'ஆதமுடைய மக்களே! நிச்சயமாக நாம் உங்களுடைய மானத்தை மறைக்கக் கூடிய ஆடையையும் அலங்கார ஆடைகளையும் உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றோம்'; என ஸூரா அல் - அஃராஃப் பின்; 26 வசனம் குறிப்பிடுகிறது.

ஆடை என்பது துணி மாத்திரமல்ல மாறாக அதை அணிபவரின் சிந்தனை, நடவடிக்கைகள், ஒழுக்கங்களில் பெரும் தாக்கத்தைச் செலுத்துகிறது. கவர்ச்சிகரமான அரைகுறை ஆடை அணிபவர்களின் எண்ணங்களும் அரைகுறையாகவே இருக்கம். ஆடை அணியும் விடயத்தில் முஸ்லிமான ஆணும், பெண்ணும் எதையதை மறைக்க வேண்டும் எதை எதை வெளிகாட்ட முடியும் என்ற வரையறை உள்ளது அவற்றைக்; கடைபிடிக்க வேண்டிய நமது கடமையாகும். 

ஆண்கள் முழங்காலுக்கும் தொப்புளுக்கும் இடையேயுள்ள மேனியை மறைப்பதும், பெண்கள் முகத்தையும் இரு மணிக்கட்டுகளையும் தவிர முழு மேனியையும் மறைப்பதும் கட்டாயமாகும். மேனி தெரியாத கெட்டியான துணியால் மறைத்துவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண்கள் தமது ;அவ்ரத்தையும் அழகையும் உடலின் கவர்ச்சியான பகுதிகளையும் மூடி மறைத்துக்கொள்ள வடிவமைக்கப்பட்ட அபாயா ஆடையானது ஒரு சில பெண்களினால் அசிங்கமாக அணியப்படுகிறது. இலங்கையின் வெப்பமான காலநிலைக்கு ஏற்ற நிறத்தில்லாது கறுப்பு நிறத்தில் அணியப்படுகிறது. விஞ்ஞான ரதியிலும் கறுப்பு ஆடை உடலுக்கு ஆரோக்கியமானதல்ல என்பது கூட இன்னும் சிலரினால் புரியப்படவில்லை. கறுப்புநிறத்தில்தான் அபாயப அணிவோம் என்று ஒர சிலர் பிடிவாதத்துடன் அணிந்து வரும் நிலையில் அதற்கு நியாயம் கற்பித்தும் ஒரு சில உலமாக்களும் வரிந்து கட்டிக்கொண்டு பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர். 

'அல் -குர்ஆனின் ஸூரா அந்நூரின் 31வது வசனம் இவ்வாறு வலியுறுத்துகிறது. (நபியே!), விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவிராக ' தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும், தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும், அதினின்று வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தங்கள் முந்தானைகளை தம் மேல் சட்டைகளின் மீதுபோட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தன் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள் அல்லது தம் பெண்கள் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்(அடிமைகள்), அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (இச்சையோடு பெண்களை விரும்ப முடியாத(அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அழலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம'; என அல்குர்ஆன் எச்சரிக்கிறது

அவ்வாறு எச்சரித்தும் நமது சில இஸ்லாமிய யுவதிகளும், திருமணம் முடித்தவர்களும் ஜவுளிக்கடைகளிலும், பொது இடங்களிலும,; திருமண வைபங்களிலும், மரண வீடுகளிலும் கூட வல்ல இறைவனின் இந்த எச்சிரிக்கையை பொறுப்படுத்தாது அரைவாசி மறைத்தும் அரைவாசி மறைக்காமலும் ஆகுமாக்கப்படாத ஆடர்வர்கள் மத்தியில் இறுக்கமான ஆடைகளோடு அரங்கேரிக் காட்சியளிக்கிறார்கள்.  அதுதான் நாகரிகம் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

பெண்களின் ஆடை விடயத்தில் எத்தகைய வரையறைகள் உள்ளதோ அவ்வாறே ஆண்கள் அணியும் ஆடை விடயத்திலும் இஸ்லாம் வரையறை செய்கிறது. ஒரு சில இளைஞர்கள் அணியும் ஆடை அவர்களுக்கு இடுப்பு இல்லையா? என கேட்க நேரிடுகிறது. பெஷன் என்ற மாயைக்குள் மயங்கிய ஆடவர்களின் ஆடைகளும் இஸ்லாமிய ஆடைக் கலாசார  விடயத்தில் கேள்விகளை எழுப்புகிறது.

இவ்வாறு ஆடை அணியும் விடயத்தில் இஸ்லாம் வகுத்த வரம்புகள், நவீன நாகரிமிக்க நமது பெண்கள் சிலரினாலும், ஆண்கள் சிலரினாலும் மீறப்படுவது மாத்திரமின்றி. பல விமர்சனங்களையும் உருவாக்குகிறது. பெண்களின் ஆடைத் தெரிவு விடயத்தில் ஒவ்வொரு பெற்றோரும், பாதுகாவலர்களும், கணவர்களும,; சகோதாரர்களும் பொறுப்புதாரிகள் என்பதோடு இளைஞர்களின் ஆடைத் தெரிவு விடயத்திலும்; ஒவ்வொரு பெற்றோர்களும் பொறுப்புதாரிகள் என்பது புரியப்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது.

நமது ஆடையமைப்புக்களும்  அணியும் முறையும் அல்லாஹ்வின் கோபத்திலிருந்து பாதுகாப்பதாக அமைவதோடு, இஸ்லாமிய ஆடையமைப்பை அசிங்கப்படுத்தாததாகவும், கேள்விக்குட்படுத்தாதாகவும், விமர்சிக்கப்படாததாகவும் அமையப்பெறுவது அவசியம். பணத்தினதும், பட்டத்தினதும். பதவியினதும் பெறுமையும், நாகரீக உலகின் நவீனத்திற்கு நாங்களும் நிகரானவர்கள் என்ற மனப்பாங்கிலான செயற்பாடுகளும் இஸ்லாமிய வழிகாட்டலிருந்து  வரம்பு மீறச் செய்கின்றன. அதனால், நாம் கேவலப்படுத்தப்படுவதோடு சமூகமும் அவகௌரவப்படுகிறது என்பது புரிதலுக்குள்ளாக வேண்டும். 

இந்தப்புரிதல் ஆடை அணிபவர்களுக்கு மாத்திரமின்றி ஆடைத்தயாரிப்பாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் ஏற்பட வேண்டும். ஏனெனில், முஸ்லிம்களின் எதிரிகள் முஸ்லிம்களின் ஒவ்வொரு விடயத்திலும் திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தொடரில் இந்த ஆடை வடிவமைப்பும் அதன் விளம்பரப் பொருளாக பெண்கள் பயன்படுத்தப்படுவதும் சமகாலத்தல் அவதானிக்கக் கூடிய முக்கிய விடயங்களாகும்.

ஆடைச் சுதந்திரமும் வர்த்தக மாபியாக்களும்

உலகில் மனிதனை உடல் உள உபாதைகளுக்குள்ளாக்கும் வைரசுக்கள் எவ்வாறு வேகமாகப் பரவுகிறதோ அவ்வாறே தனி மனித சுதந்திரம் என்ற போர்வையில் சமூகம் அங்கீகரிக்காத பல அநாகரீக செயற்பாடுகள்;;  சமூகத்திற்குள் வேகமாகப் பரப்பப்படுகின்றன. அதில் ஒன்றுதான் நவநாகரீக ஆடை வடிவங்களாகும்.

சமூகப் பிரச்சினைகளை உருவாக்கும் பல செயற்பாடுகளுக்கு சமூகத்திற்கு மத்தியில் தீர்வைக் காண முடியாதுள்ளது. அவை கட்டுப்படுத்த முடியாத வைரசுக்களாகக் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் ஆடைச் சுதந்திரம் எனும் உடல் அங்க அசைவுகளை வெளிப்படுத்தும் கவர்ச்சி ஆடைக் கலாசாரமாகும். இக்கலாசாரம் பட்டிதொட்டி எங்கும் வேகமாகப்; பரவி வருகிறது. இவற்றில் சில முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் விழுந்து கிடக்கிறார்கள். இந்நிலைமைக்கு ஒரு சில ஆடை வடிவமைப்பாளர்ளும், வர்த்தக மாபியாக்களும் காரணிகளாக உள்ளனா.;

மத, கலாசார, பண்பாட்டு விழும்பியங்களை கடைபிடித்து வாழ்ந்த மக்கள் அல்லது வாழும் மக்கள் எவையெல்லாம் அநாகரியமானது என்று தவிர்த்தார்களோ, அவற்றிலிருந்து விலகிச் செயற்பட்டார்களோ அல்லது  செயற்படுகிறார்களோ அவையெல்லாம் சமகாலத்தில் மேலத்தேய நாகரீக மோகத்தின் காரணமாக அனுமதிக்கப்பட்ட நாகரீகமிக்க கலாசாரங்களாக ஒரு சில புதிய தலைமுறையினர்; மத்தியில்; கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு முஸ்லிம் சமூகத்திலுள்ள ஒரு சில இளைஞர், யுவதிகளும் விதிவலக்கல்ல. இவ்வாறான அநாகரீக கலாசாரங்களில்; ஒன்றாகவே அங்க அசைவுகளை வெளிக்காட்டும் கவர்ச்சி ஆடைக் காலசாரமும் காணப்படுகிறது. அது முஸ்லிம் சமூகத்தில் ஒரு சிலர் அணியும் அபாயா வடிவில் காட்சி கொடுக்கிறது.

கவர்ச்சி ஆடைக் கலாசாரம் வெறுமனே விரும்பி உருவாக்கப்பட்டவையுமல்ல. மாறாக இது உலகமயமாக்கலின் விளைவு ஏற்படுத்தியதொன்றாகும். நுகர்வுச் சந்தையில் பெண்களை மூலனதப்படுத்தி தமது வியாபாரத்தை இலாபகரமானதாக்க முயலும் வர்த்தக மாபியாக்களினால் திட்டமிட்டு  திணிக்கப்படுபவைகளாகும். நுகர்வுச் சந்தையில் காணப்படுகின்ற மேலத்தேய ஆடைக் காலாசார இறக்குமதியானது  கீழேத்தேய நாகரீகமிக்க ஆடைக் கலாசாரத்தை  கவர்ச்சி ஆடைக் கலாசாரமாக மாற்றியிருக்கிறது. இதனால் எல்லாமே சுதந்திரமும், உரிமையும் என்றதொரு சீரழிவுக்கான மனப்பாங்கு  உருவாகி அவை பாரம்பரிய, பண்பாட்டு, விழுமியமிக்க கீழேயத்தேயக் கலாசாரத்தைச் சீரழித்துக்கொண்டிருக்கிறது. இச்சீரழிவில் விழுந்துள்ள ஒரு சில முஸ்லிம் இளைய தலைமுறையினர் பிழைகளை சரிகள் என்று நியாயப்படுத்திக்காண்டிருக்கிறார்கள். இதற்கு சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இறுக்கமான ஆடைகளின் ஆபத்து

சில நவீன பெண்கள் அணியும்  இறுக்கமான கவர்ச்சி ஆடைகள் அவர்களைக் காமூவர்களின் பாலியல் வன்கொடுமைக்கு தூண்டும் ஊக்கியாக மாறுகிறது. உடல் அங்க அசைவுகளை வெளிப்படுத்தும் வகையில் நுகர்வுச் சந்தைக்கு வரும் ஆடைகளை அணிபவர்களின் கவர்ச்யினால் தூண்டப்படும் பாலியல் உணர்வுகள் இக்காமூவர்களின் பாலியல் பசிக்கு இவர்களை ஆளாக்குகின்றது என்ற ஆய்வுத் தகவல்கள் நமது சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசிமாகும்.

பெண்ணின் உடல் அங்கங்களைக்;காட்டி வருமானத்தைப் பெறுக்குவதுதான் உலகமயமாதல் என்ற சந்தைக் கலாசாரம் கலைகட்டி வருகிறது. நுகர்வுச் சந்தையில் காட்சிப்படுத்தப்படுகின்ற உற்பத்திப் பொருள்களில்  ஆடைகளுக்கான கொள்வவானது அதிகமாகவே உள்ளது. அதில் புதிய தலைமுறையினரை இலக்கு வைத்து வடிவமைக்கபடும் கவர்ச்சி ஆடைகளுக்கான கேள்வியும் உச்சமாகவே உள்ளமை நுகர்வுச் சந்தைகளின் கள நிலவரமாக காணப்படுகிறது. இதில் பரிதாபகரமான நிலை என்னவெனில், பாலர்களினதும், சிறுவர்களினதும் ஆடைகள் கூட இறுக்கமானதாக வடிவமைக்கப்பட்டு சந்தைக்கு வந்துள்ளன. பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு அழகாக இருக்கிறது என்றென்னி இந்த இறுக்கமான ஆடைகளை அணிவித்து அழகு பார்க்கிறார்கள்.  இது சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கக் கூடியாகவும் அமைந்துவிடுகிறது.

இந்நிலையில், ஒரு ஆணோ பெண்ணோ எப்படி அணிய வேண்டும் எந்தக் கலாசர உள்ளடக்கத்தில் அணிய வேண்டும் என்று தீர்மானிப்பராக சமகாலத்தில் ஆண்களுமில்லை பெண்களுமில்லை. அதைத் தீர்மானிப்பவர்களாக நுகர்வுச் சந்தையை வெற்றிகரமாக முன்னெடுப்பவர்களே காணப்படுகின்றனர். அவர்களால் வடிவமைத்து நுகர்வுச் சந்தையில் அறிமுகப்படுத்தும் ஆடைகளை அறிவுக்கு உட்படுத்தாமல் கலாசரத்தையும், விழுமியங்களையும் பேணி ஒழுகாமல் தமது அழகை இவ்வாடைகள் அதிகரிக்கும் என்ற மனப்பாங்கில் தெரிவுசெய்து அவ்வாறே அணியும் நிலைமை காணப்படுவதானது ஓர் அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. 2030ஆம் ஆண்டளவில் நிர்வாண உலகத்தை உருவாக்கும் யஹுதிகளின் திட்டம் படிப்படியாக வெற்றியடைந்து வருக்கிறது என்பதே உண்மை. 

ஆனால், இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்னதாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிவிட்டார்கள் அதாவது, 'இரு பிரிவினர் நரகவாதிகள் ஆவர். அவர்களை நான் கண்டதில்லை. (அவர்களுள்) ஒரு சாரார் மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பர். அவற்றைக் கொண்டு மக்களை அவர்கள் அடிப்பர். மறுசாரார் உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர். அவர்கள் (தீய வழியில்) செல்வதுடன் (பிறரையும்) தீய வழியில் செலுத்துவர். அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று காணப்படும். இத்தகையவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்' (முஸ்லிம்). இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் அன்று கூறியவையை நிஜவாழ்கையில் கண்டுகொண்டிருக்கின்றோம்.

ஆடை அணிந்தும் அணியாத நிலைக்கு ஆண்களையும் பெண்களையும் மாற்றும் திட்டத்திற்கு ஏற்ப  குறிப்பாக பெண்ணின் எந்த உடல்பகுதியை எப்படிக் எதனூடாக காட்டினால் நுகர்வு அதிகரிக்கும். என்பதை இனங்கண்டு அதற்கேற்றால்போல் வடிமைக்கப்பட்டு நுகர்வுச் சந்தைக்கு ஆடைகள் வருகின்றன. இதனால் நுகர்வு தூண்டப்படுகிறது. மறுபுறம் ஈமானும் சுண்டி இழுக்கப்படுகிறது. இவ்வாறான ஆடைகளே இன்றயை ஆடைக் கலசாரமாக திணிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் அந்தரங்க உறுப்புக்களை காட்டும் ஆடைக் கலாசாரம் சமகால பெண்மணிகள்; பலரை ஆக்கிரமித்துள்ளது. அவர்களிரடையே வேகமாகப் பரவி வருகிறது. இறக்குமதி செய்யப்பட்ட ஆடைக்கலாசாரமானது அணிபவர்களின் உடல் அங்கங்களை கவர்ச்சிக்குரிதாக ஆக்குகின்றன.

அதுமாத்திரமின்றி, இந்த ஆடைக்கலாசாரம்தான் பெண்ணின் உரிமை, சுதந்திரம் என்றதொரு உலகமயமாதலின் பண்பாட்டுக் கலசாரமுமாகவும் மாறியிருக்கிறது. இந்நிலையில் குர்ஆனையும் நபி வழியையும் ஏற்றுவாழும் முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் இஸ்லாத்தை மலினப்படுத்தும் ஆடைகளைத் தெரிவு செய்து அணிவதைத் தவிர்ந்து கொள்வது சமகாலத் தேவை மாத்திரிமின்றி அவை இறைவனின் தண்டனையிலிருந்தும் இறைதூரதரின் சபாத்திலிருந்தும் நம்மை பாதுகாக்கும். 

அத்தோடு, இனவாதிகள் எமது ஆடைக் கலாசாரத்தைக் கொச்சைப்படுத்தவும், மறுதலிக்கவும், வீண் விமர்சனங்களை முன்வைக்கவும், எமக்குரிய ஆடைக் கலாசாரத்தைக் கேள்விக்குட்படுத்தவும் முற்படுவது தவிர்க்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகவுள்ளது.

இருப்பினும,; தங்களை சமூகத்தின் மேல்தட்டு வர்க்கதத்தினர் என்று கருதுகின்றவர்களும், நாங்கள் கற்றவர்கள் மொழிப்புலமைமிக்கவர்ககள், நாகரீகமிக்க நகரப்புறங்களில் வாழ்கின்றவர்கள், நாகரீகமிக்க ஏனைய சமூக மேல்தட்டுவர்க்கத்தினரோடு பழங்கின்றவர்கள், சர்வதேச பாடசாலைகளில் கல்விகற்றவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்துகின்ற முஸ்லிம் உம்மதியின் மத்தியிலுள்ள சிலர் இஸ்லாமிய கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களைக் கடைபிடிக்காமலும், சமூகத்தை இனவாதம் கொத்திக்கொண்டிருக்கிறது என்ற உணர்வு கூட இல்லாமலும் 'லேபல்' முஸ்லிம்களாக வாழ்வது மாத்திரிமின்றி, குர்ஆனின் போதனைகளையும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டலையும் பின்பற்றாது சில விடயங்களில் வரம்பு மீறியும் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தகையவர்களின் நாகரீக மோகத்தின் எல்லைதாண்டிய செற்பாடுகள், வாழ்க்கை நடைமுறைகள்;, அவற்றுக்கான பின்பற்றுதல்கள் அவ்வாறு வாழ்பவர்களை மாத்திரம் பாதிப்பதில்லை.  இவை முழு சமூகத்தையும் சந்தி சிரிக்கச் செய்வதோடு எவ்வாறும் வாழ முடியாது இவ்வாறுதான் வாழ வேண்டும் என்ற வாழ்க்கையை நெறிப்படுத்தும் இஸ்லாத்தின் போதனைகளை இஸ்லாத்தின் எதிரிகள் கொச்சைப்படுத்துவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன.
நாகரீக மோகத்தின் படுகுழிக்குள் விழுந்து தங்களின் அழகை வெளிப்படுத்துவதற்காக ஆடையணிந்தும் அணியாதவர்களாக நடமாடுகின்றவர்களினால் முஸ்லிம்களின் ஆடை தொடர்பில்  குறிப்பாக அபாயா தொடர்பில் மாற்று மதத்தினர் எழுப்புகின்ற கேள்விகளுக்கும் அவர்கள் முன்வைக்கின்ற விமர்சனங்களுக்கும் பதிலளிக்க முடியாத சந்தர்ப்பங்களை எதிர்நோக்க வேண்டியும் ஏற்படுகின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.


ஏனெனில், இஸ்லாமிய கலாசார ஆடையென்ற பெயரில் 1980ல் அணியப்பட்ட அபாயாக்களுக்கும் இன்று அணியப்படும் அபாயாக்களுக்குமிடையே வித்தியாசத்தைக் காண முடிகிறது. அன்று அணியப்பட்ட அபாயாக்கள் உடலை மூடிய போர்வையாகக் காணப்பட்டது. ஆனால் இன்று ஒரு சிலரினால் அணியப்படும் அபாயாக்கள் காலுக்கு சொக்ஸ் போட்டமாதிரி அத்தனை அங்க அசைவுகளையும் வெளிக்காட்டுவதாகவே அமைகிறது. எல்லா ஆடைகளையும் விட இந்த இறுக்கமான ஆடைகள் கவர்ச்சியை அள்ளிக் கொட்டுகிறது. 

இவ்வாறான நிலையில்,  இப்பெருநாhளுக்காக ஆண், பெண், பிள்ளைகள், மனைவிகள், சகோதர சகோதரிகள் தெரிவு செய்து அணியும் ஆடை இஸ்லாம் வரையறுத்த ஆடையாக இருப்பதற்கு ஒவ்வொருவர் தொடர்பலும் பொறுப்பு தாரிகளாகவுள்ளவர்களின் பொறுப்பாகவுள்ளதோடு இப்பெருநாளுக்கான ஆடைத் தெரிவானது பணத்தைக் கொடுத்து ஆபத்தை விலைக்கு வாங்காமல் இருப்பதற்கும், விமர்சனத்திற்கு உட்படாமல் இருப்பதற்கும், வரம்பு மீறாமல் இருப்பதற்கும், கண்ணியமிழக்காமல் இருப்பதற்கும் வல்ல இறைவன் துணை புரிவானாக! 

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment