ஞாயிறு முதல் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Friday, 1 June 2018

ஞாயிறு முதல் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்


2006ம் ஆண்டு சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட தபால் ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்குத் தீர்வினைத் தருமாறு கோரி ஞாயிறு நள்ளிரவு முதல் இரு தினங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தபால் ஊழியர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.


கடந்த ஐந்து மாதங்களாக இதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள நடந்த முயற்சிகள் தோல்வியுற்றுள்ள நிலையில் வேலை நிறுத்தத்தினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த அடையாள வேலை நிறுத்தத்துக்கு பதில் கிடைக்காவிட்டால் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெறும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment