அறிக்கையை வெளியிட சட்ட உதவியை நாடும் ஒஸ்டின்! - sonakar.com

Post Top Ad

Friday, 1 June 2018

அறிக்கையை வெளியிட சட்ட உதவியை நாடும் ஒஸ்டின்!மத்திய வங்கி பிணை முறி மோசடி விசாரணை அறிக்கையை முழுமையாக வெளியிடுவதற்கு சட்ட மா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ.


அர்ஜுன் அலோசியசிடம் 118 பேர் பணம் பெற்றுள்ளதாக பரவலான பேச்சு நிலவுகின்ற நிலையில் தனக்கு அது பற்றுத் தெரியாது எனவும் அவ்வாறு அந்த அறிக்கையில் இருக்கிறதா என்பது பற்றியும் தெரியாது எனவும் தெரிவிக்கின்ற ஒஸ்டின் இவ்வறிக்கையை பகிரங்கமாக வெளியிடுவதில் சட்டச் சிக்கல்கள் உள்ளனவா என்பது தொடர்பில் ஆலோசனை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் பணம் பெற்றுக்கொள்ளவில்லையென மறுப்பும் வெளியிட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment