ஜோர்தானில் உக்கிர ஆர்ப்பாட்டம்; பிரதமர் இராஜினாமா! - sonakar.com

Post Top Ad

Monday, 4 June 2018

ஜோர்தானில் உக்கிர ஆர்ப்பாட்டம்; பிரதமர் இராஜினாமா!


ஜோர்தான் வாழ்க்கைச் செலவு மற்றும் வரி அதிகரிப்புக்கு எதிராக கடந்த வாரம் ஆரம்பமான மக்கள் போராட்டம் உக்கிரமடைந்துள்ள நிலையில் அந்நாட்டு பிரதமர் இராஜினாமா செய்துள்ளார்.


எனினும் இத்தோடு தமது போராட்டத்தை நிறுத்தப் போவதில்லையென தெரிவித்துள்ள பொது மக்கள், அரசின் போக்கை மாற்ற வேண்டும் எனக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொது மக்கள் மீது வரிச்சுமையை உயர்த்தும் அரசின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மக்கள் சக்தி மேலும் எழுச்சி பெறும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment