துமிந்த தரப்பு முதலில் சுடவில்லை: நீதிமன்றில் வாதம்! - sonakar.com

Post Top Ad

Monday 4 June 2018

துமிந்த தரப்பு முதலில் சுடவில்லை: நீதிமன்றில் வாதம்!


முன்னாள் நாடாளுமன்ற உறுபிபினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக தவறாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவரது மேன்முறையீட்டு வழக்கில் வாதாடி வரும் சட்டத்தரணிகள், பாரத லக்ஷ்மன் உயிரிழந்த குறித்த சம்பவத்தில் முதலில் சுட்டது அவரது தரப்பு எனவும் தமது கட்சிக்காரர்கள் பாதுகாப்புக்காக திருப்பிச் சுட்டதாகவும் வாதிட்டுள்ளார்.


துமிந்த சில்லாவுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என கோரி வாதிட்டு வரும் ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொட உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இவ்வாறு வாதிட்டுள்ளார்.

இதேவேளை, துமிந்த சில்வா துப்பாக்கியை எடுக்கச் சொன்னதற்கான ஆதாரமும் இல்லையெனவும் குறித்த வழக்கில் அவருக்கு எதிராக அனைத்து சாட்சியங்களும் தவறான வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் வாதாடப்படுகின்றமையும் துமிந்தவுக்கு ஏலவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment