தபால் அமைச்சரின் தொகுதியிலும் செயலிழந்த தபால் நிலையம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 June 2018

தபால் அமைச்சரின் தொகுதியிலும் செயலிழந்த தபால் நிலையம்!

தபால் ஊழியர்கள் இன்று 19ம் திகதி பணிக்குத் திரும்பாவிட்டால் தாமாகவே இராஜினாமா செய்ததாக அர்த்தமாகும் எனும் அமைச்சின் எச்சரிக்கையையும் மீறி தபால் அமைச்சர் ஹலீமின் தொகுதியான ஹரிஸ்பத்துவ உட்பட கண்டி மாவட்டத்தில் 19 தபால் நிலையங்கள் இன்றும் மூடப்பட்டிருந்தது.


நேற்றைய தினம் அமைச்சு இவ்வெச்சரிக்கையை விடுத்திருந்த அதேவேளை, சிறு குழுவினர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பணி திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டியில் முக்கிய தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்ததனால் பொது மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

-மொஹொமட் ஆஸிக்

No comments:

Post a Comment