குற்றஞ்சாட்டுவது 'போலி' முகவர் சங்கம்: ஹலீம்! - sonakar.com

Post Top Ad

Monday, 25 June 2018

குற்றஞ்சாட்டுவது 'போலி' முகவர் சங்கம்: ஹலீம்!


ஹஜ் குழு முறைகேடான முறையில் கோட்டாக்களை பகிர்ந்தளிப்பதாகவும் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டை மறுதலித்துள்ள அமைச்சர் ஹலீம் போலி முகவர் சங்கமே குற்றஞ்சாட்டுவதாக தெரிவிக்கிறார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ள பதில்:


மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் போலியான முகவர் சங்கத்தை ஏற்படுத்தி போலிக் குற்றச் சாட்டுக்களை சுமத்தி மக்களை தவாறன வழியில் செல்ல சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த மூன்று வருடங்களாக  எமக்கு கிடைக்கும் கோட்டாவை  முகவர்களுக்கன்றி நாங்கள் ஹஜ் யாத்திதிகர்களுகக்கே  வழங்கி வருகின்றோம்.  இதன் காரணமாகத்தான் ஹஜ் கட்டணம் குறைந்துள்ளது. யாத்திரியகர்களுக்கு வழங்கப்படும் வழங்கப்படும் சேவைகளும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் தமது வாய்ப்புக்களை இழந்த முகவர்களே அரசாங்க ஹஜ் குழு மீது பழிசுமத்த முற்படுகின்றனர்.  உயர் நீதி மன்றத்தின் ஆலோசனையின் பிரகாரமே இதனை ஊழல் மோசடியுமின்றி முன்னெடுத்துச் செல்கின்றோம் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம்.

ஹஜ் குழு மீது ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டுகள் தொடர்பாக ஊடகவியாளர்களின் கேள்விக்கு விடையளித்த  முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

இன்று சமூகத்திற்கு மத்தியில்  தமது வாய்ப்புக்களை இழந்த முகவர் நிலையங்களே  இன்று அரசாங்க ஹஜ் குழு மீது பழிசுமத்த முற்படுகிறார்கள். அரசியல் இலாபம் கருதி சிலர் ஹஜ் குழு மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்கள். ஹஜ் தொடர்பாக அறவிடப்படும் சகல கட்டங்களுக்கும் பற்றுச் சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன. சகல நிதிக்கணக்குகளுக்கும் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளன. ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்து முற்பணமாக அறவிடப்படும் 25000 ரூபா  திருப்பிச் செலுத்தப்படுகிறது.

உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று  விசாரணையிலுள்ளது.  உயர் நீதி மன்றம் வழங்கியுள்ள  ஆலோசனையின் பிரகாரமே  நாம் செயற்படுகின்றோம். 

இன்று எம்மை விமர்சிப்பவர்கள் கடந்த ஆட்சிய காலத்தில் கடும் போக்கு அமைப்புக்களிடம் நாடிச் சென்று  நீதி பெற முயற்சி செய்த  சிலரே இப்போது ஹஜ் தொடர்பாகப் பேசி சமுதாயத்தைக் காட்டிக் கொடுக்க  முற்பட்டுள்ளார்கள். மக்கள் தம்மை நிராகரித்தமையினால் சீராக இயங்கும் முழு ஹஜ் ஏற்பாட்டையும் சிPர்குலைப்பதே இவர்களது நோக்கம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

ஹஜ் விவகாரம் எந்தவிதமான ஒழிவு மறைவும் இல்லை. எல்லாம் வெளிப்படையாகவே நடைபெறுகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

-இக்பால் அலி

No comments:

Post a Comment