அரசுக்கு 'உதவத்தான்' அப்படிச் சொன்னேன்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Thursday, 28 June 2018

அரசுக்கு 'உதவத்தான்' அப்படிச் சொன்னேன்: மஹிந்த


அரசாங்கத்தால் தேடப்படும் முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதரும் மஹிந்தவின் உறவினருமான உதயங்க வீரதுங்க, தான் சொன்னால் நாடு திரும்புவார் எனத் தெரிவித்தது அரசுக்கு உதவும் நோக்கில் என விளக்கமளித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.


அரசாங்கத்தால் அவரைக் கைது செய்து அழைத்து வர முடியாது போயுள்ள நிலையிலேயே தான் அவ்வாறு தெரிவித்ததாகவும் தற்போது உதயங்கவின் குழந்தைகள் பாடசாலை செல்வதோடு பரீட்சைகள் இடம்பெறவிருப்பதால் ஒரு மாதம் கழித்து அவரை வரவழைக்க முடியும் என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

மிக் விமானக் கொள்வனவு மோசடி மற்றும் ஆயுத விற்பனை விவகாரங்களில் உதயங்க வீரதுங்க தேடப்படுவதாக அரசு தெரிவிக்கின்ற அதேவேளை, மஹிந்த ராஜபக்ச வெளிநாடு சென்ற வேளைகளில் இருவரும் சந்தித்துக் கொண்டனை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment