கடவுச்சீட்டு பிரச்சினைக்கு அடுத்த வாரத்துக்குள் தீர்வு! - sonakar.com

Post Top Ad

Thursday, 28 June 2018

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு அடுத்த வாரத்துக்குள் தீர்வு!


அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு கையிருப்பு இல்லாததனால் விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில் அடுத்த வாரத்துக்குள் போதிய கையிருப்பு பெற்றுக்கொள்ளப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.புதிய தொழிநுட்பத்துடன் புதிய வகை கடவுச்சீட்டை விநியோகிக்க எதிர்பார்த்ததனாலேயே கையிருப்பு முடியும் நிலை வரை தாமதமானதாகவும் எனினும் தற்போது மீண்டும் தற்போது நடைமுறையில் உள்ள கடவுச்சீட்டு வடிவத்தையே பயன்படுத்தப் போவதாகவும் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளார்.

கையிருப்பு பற்றாக்குறை பற்றி கடந்த நவம்பர் மாதமே எச்சரிக்கப்பட்டதாகவும் முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment