பலஸ்தீன் வேண்டுகோளை ஏற்று இஸ்ரேலைப் புறக்கணிக்கும் ஆர்ஜன்டினா! - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 June 2018

பலஸ்தீன் வேண்டுகோளை ஏற்று இஸ்ரேலைப் புறக்கணிக்கும் ஆர்ஜன்டினா!


உதைபந்தாட்ட உலகக் கோப்பை விளையாட்டு போட்டிகளின் முன்னோட்டமாக தமது நாட்டில் ஆர்ஜன்டினா தேசிய அணியுடனான நட்பு ரீதியிலான போட்டியொன்றை நடாத்த இஸ்ரேலிய அரசு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

1948ல் சியசோனிஸ்டுகளால் அபகரிக்கப்பட்ட நிலத்தில் அமையப்பெற்றுள்ள விளையாட்டரங்கில் உதைபந்தாட்டத்தில் முன்னணி இடம் வகிக்கும் நாடான ஆர்ஜன்டினா விளையாடச் செல்வது, ஆக்கிரமிப்பினை அங்கீகரிப்பதாக அமையும் என பலஸ்தீன உதைபந்தாட்ட சம்மேளனம் முன் வைத்த நியாயத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் ஆர்ஜன்டினா குறித்த போட்டியில் பங்கேற்பதில்லையென முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.


இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு தனிப்பட்ட முறையில் ஆர்ஜன்டினா பிரதமரைத் தொடர்பு கொண்டு பேசியும் இம்முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மில்லியன் கணக்கான அரபு ரசிகர்களைக் கொண்டுள்ள மெசி, இப்போட்டியில் கலந்து கொண்டால் மெசியின் பெயர் கொண்ட மேலாடைகளை ரசிகர்கள் எரியூட்டி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் எனவும் பரவலாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரப்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பலஸ்தீன மக்களின் வேண்டுகோளுக்கு ஆர்ஜன்டினா மதிப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment