தொடரும் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பல கோடி நஷ்டம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 17 June 2018

தொடரும் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பல கோடி நஷ்டம்!


தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடரும் நிலையில் தபால் திணைக்களத்திற்கு பல கோடி ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


ஊழியர் நியமன முறைமை தொடர்பிலான பிணக்கினைத் தீர்த்து வைக்க அமைச்சு மட்டத்தில் கால அவகாசம் கேட்கப்படுகின்ற போதிலும் அதற்கான தீர்வு யோசனை முன் வைக்கப்படவில்லையென போராட்டம் தொடர்கிறது.

நடைமுறை அரசில் தபால் திணைக்களம் மிக மோசமான அளவு வேலை நிறுத்தப் போராட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளமையும் கடந்த 12ம் திகதி முதல் இடம்பெற்று வரும் தற்போதைய வேலை நிறுத்தத்தில் சுமார் 24,000 ஊழியர்கள் பங்கேற்பதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment