'தவளை'க் கொத்து ரொட்டி; உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்கு! - sonakar.com

Post Top Ad

Sunday, 24 June 2018

'தவளை'க் கொத்து ரொட்டி; உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்கு!


தான் கொள்வனவு செய்த 'சிக்கன்' கொத்து ரொட்டிக்குள் தவளையிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த பெண்ணொருவர் சுகாதார அதிகாரிகளிடம் முறையிட்டதன் பின்னணியில் அம்பலாந்தொட்ட மல்பென்ன பகுதி உணவகம் ஒன்றின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


வீட்டுக்கு எடுத்துச் சென்று பார்த்த வேளையில் கொத்து ரொட்டிக்குள் தவளையிருப்பதைக் கண்ட குறித்த பெண், உடனடியாக முறையிட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து விசாரணை செய்த சுகாதார அதிகாரி, தவளையையும் சேர்த்து கொத்தியிருப்பதைக் கண்டு இவ்வழக்கைத் தொடர்ந்துள்ளமையும் எதிர்வரும் 25ம் திகதி உணவக உரிமையாளருக்கு நீதிமன்றில் ஆஜராக உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment