புலியை அடித்துக் கொன்ற இருவருக்கு விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Sunday, 24 June 2018

புலியை அடித்துக் கொன்ற இருவருக்கு விளக்கமறியல்கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் அண்மையில் பொது மக்களைத் தாக்கிய புலி ஒன்று கொல்லப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவத்தைக் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்ததோடு இறந்த புலியைப் பல்வேறு வகையில் காட்சிப்படுத்தியதன் மூலம் இது குறித்த எதிர்ப்பலைகள் உருவாகியிருந்தது.

இந்நிலையில் நேற்றிரவும் இன்று காலையும் இருவர் கைது செய்யப்பட்டு 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment