மின்சார சபை - தபால் ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்துக்கு முஸ்தீபு! - sonakar.com

Post Top Ad

Monday, 11 June 2018

மின்சார சபை - தபால் ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்துக்கு முஸ்தீபு!

BxgQVU9

மின்சார சபை பொறியியலாளர்களின் தொழிற்சங்கம் மற்றும் தபால் சேவை ஊழியர்கள் இன்று மீண்டும் வேலை நிறுத்தமொன்றை ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.


மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் கடந்த புதன் கிழமை  திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தத்தை பேச்சுவார்த்தைகளின் பின் கைவிட்டிருந்தது. எனினும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென சுட்டிக்காட்டி மீண்டும் வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில், புதிதாக வேலைக்கமர்த்தப்படுவோர் தெரிவு செய்யப்படும் முறை தொடர்பிலான முரண்பாட்டின் அடிப்படையில் தபால் ஊழியர்களும் மாலை 4 மணி முதல் வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment