கடவுச்சீட்டு விவகாரம்: பயணிகளுக்கு அசௌகரியம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 26 June 2018

கடவுச்சீட்டு விவகாரம்: பயணிகளுக்கு அசௌகரியம்!


அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு கையிருப்பில் இல்லாத நிலையில் கட்டாயம் தேவைப்படுபவர்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டில் அனைத்து நாடுகளுக்குமான  அனுமதி வழங்கும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், சில நாடுகளில் இக்கடவுச்சீட்டை ஏற்றுக்கொள்ள மறுப்பதால் பயணிகள் அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

புதிய கையிருப்பு வரும்வரை வேறு வழியேதும் இல்லையென குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவிக்கின்ற அதேவேளை கடந்த வருடமே கையிருப்பு முடிவுறுவது குறித்து தெரிவிக்கப்பட்ட போதிலும் அதிகாரிகள் அலட்சியம் செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment