அரசியல் கட்சி செயலாளர்களை சந்திக்கிறார் தேசப்பிரிய! - sonakar.com

Post Top Ad

Sunday, 24 June 2018

அரசியல் கட்சி செயலாளர்களை சந்திக்கிறார் தேசப்பிரிய!


எதிர்வரும் 26ம் திகதி பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களையும் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் தேர்தல் ஆணையாளர்.மாகாண சபைகளுக்கான தேர்தல் இவ்வருடம் நடாத்தப்படுமா என்பது சந்தேகத்துக்கள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் குறித்தே கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பரில் தேர்தல் இடம்பெறும் என முன்னர் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதற்கான சாத்தியக்கூறு இல்லையென அமைச்சர் பைசர் முன்னர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை நீண்ட இழுபறிக்குப் பின் நடாத்தப்பட்ட உள்ளூராட்சி தேர்தலில் ஆளுந்தரப்பு பாரிய பின்னடைவை  சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment