
முஸ்லிம்களுக்கும் ராஜபக்சாக்களுக்குமிடையில் பிரிவை உருவாக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் செய்த காரியயங்கள் தொடர்பில் தாம் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம் என கவலை தெரிவிக்கிறார் கோத்தபாய ராஜபக்ச.
கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகக் கூடும் எனும் நம்பிக்கையில் முஸ்லிம் சமூகத்துடனான தமது உறவைப் புதுப்பித்து வரும் கோத்தா கடந்த கால தவறுகள் தொடர்பிலும் பேசி வருகிறார்.
இந்நிலையில், இன்று அவர் கலந்து கொண்ட இப்தார் நிகழ்வொன்றில் வைத்து அக்காலப் பகுதியில் இன்னும் கவனமாக நடந்து கொண்டிருந்திருக்கலாம் எனவும் அதிகாரத்தில் இருந்த நேரத்தில் மேலும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2014 வன்முறை காலத்தில் முஸ்லிம்களால் நெருங்கக் கூட முடியாத தொலைவில் ஆட்சியாளர்கள் இடைவெளியை உருவாக்கிக் கொண்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment