குற்றச்சாட்டுள்ள இஸ்மாயிலுக்கு MP பதவி: விஜேதாச சாடல்! - sonakar.com

Post Top Ad

Friday, 8 June 2018

குற்றச்சாட்டுள்ள இஸ்மாயிலுக்கு MP பதவி: விஜேதாச சாடல்!


அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுள்ள வி.சி இஸ்மாயில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளதாக சாடியுள்ளார் விஜேதாச ராஜபக்ச.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சுழற்சி முறையில் வி.சி இஸ்மாயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அவர் உபவேந்தராகப் பதவி வகித்த காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுகள் இருப்பதாக விஜேதாச சபையில் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இவ்வாறானவர்கள் நாடாளுமன்றுக்குள் வருவதாகவும் சாடியுள்ளார்.

முஸ்லிம் கட்சிகளிரண்டும் ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து பெற்றுக்கொண்ட தேசியப் பட்டியல்களை தமது கட்சி மட்டத்துக்குள் சுழற்சி முறையில் பகிர்ந்தளித்து பதவி வேட்கையைத் தணித்து வருகின்றதன் தொடர்ச்சியில் இந்நியமனமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment