கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள யாரும் பணம் பெறவில்லை: பந்துல! - sonakar.com

Post Top Ad

Monday, 4 June 2018

கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள யாரும் பணம் பெறவில்லை: பந்துல!


அர்ஜுன் அலோசியசிடம் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுள்ளதாக பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் உள்ளடங்கவில்லையென தெரிவிக்கிறார் பந்துல குணவர்தன.இப்பட்டியலில் தாம் இல்லையென மலிக் சமரவிக்ரம, சம்பிக்க ரணவக்க, ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் ஏலவே பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கூட்டு எதிர்க்கட்சியினருக்கும் இதற்கும் தொடர்பில்லையென தெரிவிக்கின்ற அவர், அதே குழுவினரே சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் பின்னணியிலும் இருப்பதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment