இரு நாட்களில் தபால் சேவை வழமைக்குத் திரும்பும் - sonakar.com

Post Top Ad

Thursday, 28 June 2018

இரு நாட்களில் தபால் சேவை வழமைக்குத் திரும்பும்


வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு தபால் ஊழியர்கள் பணி திரும்பியுள்ள நிலையில் இன்னும் இரு தினங்களுக்குள் அனைத்து சேவைகளும் வழமைக்குத் திரும்பிவிடும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.கட்டுநாயக்கவில் தேக்கி வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு தபால் மற்றும் பொதிகள் விநியோகமும் ஆரம்பித்துள்ளதாகவும் ஏனைய தபால்களை துரிதமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இரு தினங்களில் அனைத்து தபால் விநியோகமும் வழமை போன்று இயங்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இருபதுக்கு மேற்பட்ட தபால் ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment