ட்ரம்புடனான சந்திப்பு: சிங்கப்பூர் சென்றடைந்த கிம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 10 June 2018

ட்ரம்புடனான சந்திப்பு: சிங்கப்பூர் சென்றடைந்த கிம்!


உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற ட்ரம்ப் - கிம் சந்திப்புக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் சிங்கப்பூர் சென்றடைந்துள்ளார் வடகொரிய ஜனாதிபதி கிம்.


ஜி7 மாநாட்டிலிருந்து டொனால்ட் ட்ரம்பும் இச்சந்திப்பில் கலந்து கொள்ளும் நோக்கில் முன் கூட்டியே வெளியேறியுள்ள நிலையில் நாளை மறுதினம் இச்சந்திப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

வடகொரியா அணு ஆயுதத்தை முழுமையாகக் கை விட வேண்டும் என ட்ரம்ப் நிர்வாகம் கோருகின்ற அதேவேளை, அணு ஆயுதம் வைத்திருப்பதே தமக்குப் பாதுகாப்பானது என நம்பி வந்த வடகொரியா அண்மையிலேயே அமெரிக்காவின் எப்பாகத்தையும் தாக்கக்கூடிய அணு ஆயுத வல்லமையைப் பெற்றுள்ளமை நிரூபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தென் கொரியாவுடன் இணைந்து இராணுவ பயிற்சி மற்றும் மிரட்டல்களை அமெரிக்கா தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வடகொரியாவும் தெரிவிக்கிறது. இப்பின்னணியில் இடம்பெறவுள்ள ட்ரம்ப் - கிம் சந்திப்பின் விளைவுகள் எவ்வாறு அமையும் என உலக நாடுகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

No comments:

Post a Comment