சாய்ந்தமருதில் மினி சூறாவளி! - sonakar.com

Post Top Ad

Monday 18 June 2018

சாய்ந்தமருதில் மினி சூறாவளி!



சாய்ந்தமருது பிரதேசத்தில்  2018-06-17 ஆம் திகதி மாலை  வீசிய மினி சூறாவளிகாற்று காரணமாக  பொலிவோரியன் வீட்டுத்திட்டத்திலும் ஏனைய பிரதேசங்களிலும்  பாரிய சேதங்கள் இடம்பெற்றுள்ளன.

சம்பவம் இடம்பெறும்போதே கல்முனை மாநகரசபையின் உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அஸீம் எம்.ஏ.றபீக் ஆகியோர் ஸ்தலத்துக்கு விரைந்து தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவர்களுடம் பிரதேசத்துக்குப் பொறுப்பான கிராம சேவகர் எம்.எம்.மாஹீர், சாய்ந்தமருது அனர்த்த முகாமைத்துவ அலுவலகர் மற்றும் பிரதேச செயலக பிரதம இலிகிதர் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.

சம்பவத்தின்போது காரியப்பர் வித்தியாலயத்தின் வகுப்பறைகளின் கூரைகள் காற்றில் அடித்துச்சொல்லப் பட்டிருந்ததுடன் சுமார் 65 வீடுகளின் கூரைகள் முழுமையாகவும் சில பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளது.


குறித்த குடும்பத்தினர் காரியப்பர் வித்தியாலயத்தின் ஒரு பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடங்களை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபாவும் கல்முனை பொலிசாரும் பார்வையிட்டதுடன் உரிய நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதேச செயலாளர் உறுதியளித்தார்.

-யூ.கே.காலித்தீன், எம்.வை.அமீர், றம்ஸான் அபூபக்கர்

No comments:

Post a Comment