யாழ்: பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; பாதுகாப்பு அதிகரிப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 18 June 2018

யாழ்: பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; பாதுகாப்பு அதிகரிப்பு


யாழ், தெல்லிப்பளையில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இரு இளைஞர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலைத் தடுக்கச் சென்ற பொலிசாரை வாளால் வெட்ட முயன்ற நிலையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கிறது.

நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தின் பின்னணியில் அங்கு விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமையும் சம்பவத்தின் பின்னணியில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment