ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவு நில நடுக்கம்: மூவர் பலி! - sonakar.com

Post Top Ad

Monday, 18 June 2018

ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவு நில நடுக்கம்: மூவர் பலி!


ஜப்பான், ஒசாகாவில் இன்று காலை இடம்பெற்ற நில நடுக்கத்தில் மூவர் உயிரிழந்து நூற்றுக்கணக்கானோர் காயமுற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


காலை வேளையில் இடம்பெற்ற நில நடுக்கத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் ரயில் சேவைகள் முடங்கிப் போயுள்ளன.

இப்பின்னணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment