
கதரகம, கிரிவெஹர விகாராதிபதி மீது நேற்றிரவு நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் சூத்திரதாரிகளைத் தேடி வரும் பொலிசார் கொலை முயுற்சியில் ஈடுபட்டவர்கள் பயணித்த ஜீப்பைக் கண்டு பிடித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் விகாரைக்குள் இடம்பெற்ற பிறிதொரு சர்ச்சையே இச்சம்பவத்தின் பின்னணியென தற்போது பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் விகாராதிபதி தமிந்த தேரோ உட்பட இருவர் காயமுற்றுள்ள நிலையில் தமிந்த தேரரின் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்துள்ளதாகவும் தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment