தங்க மாலைத் திருட்டு: மீண்டும் தூசுதட்டப்படும் ஞானசாரவின் வழக்கு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 13 June 2018

தங்க மாலைத் திருட்டு: மீண்டும் தூசுதட்டப்படும் ஞானசாரவின் வழக்கு!


2008ம் ஆண்டு கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்த ஞானசாரவின் பொது பல சேனா, அவ்வாண்டில் தலஹேன தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தி அங்கு இருவரது தங்க மாலைகளை அபகரித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.


எனினும், இவ்வழக்கு முறையாக விசாரிக்கப்படாமல், சாட்சிகளின் விசாரணையின்றி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 2014 ஏப்ரல் மாதம் அவசரமாக நிறைவுசெய்யப்பட்டு ஞானசார உட்பட 11 பயங்கரவாதிகள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சட்டமா அதிபர் இது தொடர்பில் தனது ஆட்சேபனையுடன் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏலவே நீதிமன்ற அவமதிப்பில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள ஞானசாரவின் இவ்வழக்கு மேலதிக விசாரணை நவம்பர் 23ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment