ஹலீமின் கோரிக்கையையும் மீறி தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 13 June 2018

ஹலீமின் கோரிக்கையையும் மீறி தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்


இரு வாரங்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவித்தும் கூட தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை கவலையளிப்பதாக தெரிவிக்கிறார் தபால் அமைச்சர் ஹலீம்.


இந்நிலையில், தான் தீர்வைப் பெற்றுத் தருவேன் எனும் நம்பிக்கையில் வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என அமைச்சர் நேற்றைய தினம் விடுத்த வேண்டுகோளையும் மீறி  தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது.

ஊழியர் நியமன முறைமை தொடர்பிலான முரண்பாடு தொடர்பில்  அரசு முறையான பதிலைத் தரவில்லையென தபால் ஊழியர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment