ஈரான்: முஹம்மத் பின் சல்மான் - தெரேசா மே உரையாடல்! - sonakar.com

Post Top Ad

Sunday 3 June 2018

ஈரான்: முஹம்மத் பின் சல்மான் - தெரேசா மே உரையாடல்!



ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ள போதிலும் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் தொடர்ந்தும் ஒப்பந்தத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நன்றி தெரிவித்துள்ளதுடன் அதன் முக்கியத்துவம் பற்றி ஐக்கிய இராச்சிய பிரதமர் தெரேசா மேயுடன் தொலைபேசியூடாக உரையாடியுள்ளார் சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான்.



சர்வதேச எண்ணை விலையுயர்வைக் கட்டுப்படுத்தல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இருவரும் உரையாடியதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த புதன் கிழமை யெமனிய ஜனாதிபதியை சந்தித்து பிராந்திய நிலவரம் குறித்து உரையாடிய முஹம்மத் பின் சல்மான் தற்போது சர்வதேச உறவுகளைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment