பொது மன்னிப்பு 'தேவையில்லை' : ஞானசார! - sonakar.com

Post Top Ad

Saturday, 23 June 2018

பொது மன்னிப்பு 'தேவையில்லை' : ஞானசார!


தனக்கு ஜனாதிபதி ஊடாக பொது மன்னிப்பைப் பெற்றுத்தர முயற்சிப்பது அவசியமற்றது என தெரிவிக்கின்ற ஞானசார, செய்யாத குற்றத்திற்கு எதற்காக பொது மன்னிப்பு என கேள்வியெழுப்பியுள்ளார்.


நீதிமன்றுக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்த ஞானசார, அங்கு சாட்சியமளித்துக்கொண்டிருந்த பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் நீண்ட விசாரணையின் பின்னர் ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வெலிக்கடை அழைத்துச் செல்லப்பட்டிருநதார்.

எனினும், அங்கு வைத்தியசாலையில் அனுமதி பெற்றிருந்த ஞானசார நேற்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment