பலஸ்தீன விவகாரம்: மீண்டும் தனிமைப்பட்ட அமெரிக்கா! - sonakar.com

Post Top Ad

Saturday, 2 June 2018

பலஸ்தீன விவகாரம்: மீண்டும் தனிமைப்பட்ட அமெரிக்கா!பலஸ்தீனிய மக்களுக்கு சர்வதேச பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என குவைத் முன் வைத்த பிரேரணையை ஏலவே அறிவித்த படி அமெரிக்கா வீட்டோ மூலம் நிராகரித்துள்ளது.எனினும், நேற்றைய  வாக்கெடுப்பின் போது அமெரிக்கா மாத்திரமே இஸ்ரேலுக்கு ஆதரவாக இவ்வாறு கையுயர்த்திய நிலையில் மீண்டும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது..

பிரான்ஸ், ரஷ்யா உட்பட 10 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ள அதேவேளை, ஐக்கிய இராச்சியம், போலந்து உட்பட்ட நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இஸ்ரேலிய எல்லையில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் கடந்த சில வாரங்களாக 120 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் காயங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment