இளம் தாதியை சுட்டுக் கொன்ற இஸ்ரேல்! - sonakar.com

Post Top Ad

Saturday, 2 June 2018

இளம் தாதியை சுட்டுக் கொன்ற இஸ்ரேல்!


இஸ்ரேலிய எல்லைப்புறத்தில் இடம்பெற்று வரும் தொடர் ஆர்ப்பாட்டங்களில் கடந்த சில வாரங்களாக 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் களத்தில் காயமுற்றவர்களுக்குப் பணியாற்றிக்கொண்டிருந்த 20 வயது இளம் தாதி ரஸான் அல் நஜார் என அறியப்படும் இளம் தாதியைக் ஸ்னைப்பர் தாக்குதல் மூலம் சுட்டுக் கொன்றுள்ளது இஸ்ரேல்.


ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தும் இஸ்ரேல், காயப்பட்டவர்கள் மருத்துவ உதவிகள் பெறுவதையும் தடுத்து வருகிறது. இந்நிலையிலேயே களப்பணியாற்றிய இளம் தாதியொருவர் கொல்லப்பட்டுள்ளமை உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், அமெரிக்காவின் ஆதரவு மற்றும் இஸ்ரேலைக் காப்பாற்றும் வீட்டோ அதிகாரத்தின் முன் உலகம் மௌனியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment