அமெரிக்க பத்திரிகையின் 'தகவல்': நாமல் விசனம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 28 June 2018

அமெரிக்க பத்திரிகையின் 'தகவல்': நாமல் விசனம்!


இலங்கையில் சீனாவின் தலையீடு பற்றி நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரை உண்மைக்குப் புறம்பான பல்வேறு விடயங்களைக் கொண்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளார் நாமல்.தமது தந்தையின் ஆட்சிக்காலத்தின் போது சீன தலையீடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் உண்மையன்று என அவர் தெரிவிக்கிறார்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு கடன் வழங்குவதன் மூலம் அந்நாடுகளின் முக்கிய தளங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் சீனாவின் யுக்திக்கும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சிறந்த உதாரணம் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவிக்கிறது.

அத்துடன் மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் செலவுகளுக்கும் சீனாவே நிதியுதவி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே நாமல் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment