சவுதி: மகிழ்ச்சியில் பெண் வாகன சாரதிகள்; தடை நீக்கம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 24 June 2018

சவுதி: மகிழ்ச்சியில் பெண் வாகன சாரதிகள்; தடை நீக்கம்!


சவுதி அரேபியாவில் பல தசாப்தங்களாக பெண்கள் வாகனங்களை செலுத்துவதற்கு இருந்து வந்த தடை இன்றுடன் உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளது.


முஹம்மத் பின் சல்மான் முடிக்குரிய இளவரசராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது மறுமலர்ச்சி திட்டங்களுள் ஒன்றாக பெண்களுக்கெதிராக விதிக்கப்பட்டிருந்த இத்தடையும் நீக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தடை உத்தியோகபூர்வமாக நீக்கப்பட முன்பதாகவே வாகனங்களை செலுத்திய பெண்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment