துருக்கியில் இன்று தேர்தல்; பதவியைத் தக்க வைக்க போட்டியிடும் அர்துகான்! - sonakar.com

Post Top Ad

Sunday, 24 June 2018

துருக்கியில் இன்று தேர்தல்; பதவியைத் தக்க வைக்க போட்டியிடும் அர்துகான்!


துருக்கி சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதாக மேற்குலகில் பரவலான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாவதற்காக தேர்தலில் போட்டியிடுகிறார் தற்போதைய ஜனாதிபதி அர்துகான்.இம்முறை முஹர்ரம் இன்சுடன் பலத்த போட்டி நிகழ்வதாக துருக்கிய ஊடகங்கள் தெரிவிக்கின்ற அதேவேளை நீண்ட காலம் நாட்டின் நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் அர்துகான் வெற்றிபெறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலட்மிர் புட்டினின் வழியில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளை உயர் பதவியாக மாற்றி அதன் மூலம் ஆட்சிபீடத்தில் அர்துகான் தொடர்ந்து வருகின்றமை குறித்து பாரிய அளவில் விமர்சிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment