யாழ் பல்கலை சிங்கள மாணவர்களிடையே கைகலப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 24 June 2018

யாழ் பல்கலை சிங்கள மாணவர்களிடையே கைகலப்பு


யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட சிங்கள மாணவர்களுக்கு இடையே கைகலப்பில் கத்திக் குத்துக்கு இலக்காகி இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இந்தச் சம்பவம் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது.

ஜயசூர்ய (வயது -26), சண்றுவான் (வயது – 26) ஆகிய இருவரே கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு தலையிலும் மற்றயவருக்கு முதுகிலும் கத்திக் குத்து காயம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

“யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி சிங்கள மாணவர்கள் இரண்டு தரப்புகளாக நீண்ட நாள்களாக செயற்படுகின்றனர். ஒரு தரப்பினர் இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த இடத்துக்கு வந்த மற்றய தரப்பினர் பகிடிவதை தொடர்பில் பேச்சுக்களை ஆரம்பிக்க இரண்டு தரப்புகளுக்கு இடையேயும் கைகலப்பு ஏற்பட்டது.

இதன்போது மாணவர் ஒருவர் கத்தி எடுத்து இருவரைக் குத்தினார்” என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. கைகலப்பில் மேலும் சில மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment