பௌத்த துறவிகளை விசாரிக்க தனி நீதிமன்றம் கோரும் சம்பிக்க! - sonakar.com

Post Top Ad

Monday, 18 June 2018

பௌத்த துறவிகளை விசாரிக்க தனி நீதிமன்றம் கோரும் சம்பிக்க!


பௌத்த துறவிகள் தொடர்புபட்ட விவகாரங்கள் தனி நீதிமன்றில் விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.


ஜாதிக ஹெல உறுமயவில் சம்பிக்கவின் சகாவாக இருந்து பின்நாளில் பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் செயலாளராக செயற்பட்டு வந்த ஞானசார தற்போது ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே பௌத்த துறவிகள் தொடர்பான வழக்குகளை தனி நீதிமன்றில் விசாரிப்பதோடு இதே போன்று ஏனைய வழக்குகளும் துரிதமாக விசாரிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment