திருடர்களிடம் ஆட்சிப் பொறுப்பை வழங்கக் கூடாது: அர்ஜுன - sonakar.com

Post Top Ad

Sunday, 24 June 2018

திருடர்களிடம் ஆட்சிப் பொறுப்பை வழங்கக் கூடாது: அர்ஜுன


நாட்டின் வளத்தைத் திருடி மக்களை அச்சத்தில் வாழ வைப்பவர்களிடம் மக்கள் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விடக் கூடாது என தெரிவித்துள்ளார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க.


மாறாக, நாட்டை விரும்பும் நாட்டின் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டியங்கக்கூடியவர்களே ஆட்சிப் பொறுப்பிலிருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சட்ட ஒழுங்கை நிலை நாட்டி, இன ஐக்கியத்தை வலுப்படுத்தி இயங்கக்கூடிய 'நல்லாட்சியை' மக்கள் ஆதரிக்க வேண்டுமே தவிர இன பேதங்களை உருவாக்கி அரசியல் இலாபம் காண முனைபவர்கள் இந்நாட்டின் ஆட்சியாளர்களாக வரக்கூடாது என அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment