நேரடி சந்திப்புக்குத் தயாராகும் ட்ரம்ப் - கிம்! - sonakar.com

Post Top Ad

Monday, 11 June 2018

நேரடி சந்திப்புக்குத் தயாராகும் ட்ரம்ப் - கிம்!


திட்டமிட்டபடி ஜுன் 12ம் திகதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - வடகொரியா ஜனாதிபதி கிம் இடையேயான சந்திப்பு நாளைய தினம் சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளது.


இந்நிலையில், இரு நாட்டுத் தலைவர்களும் தற்போது சிங்கப்பூர் சென்றடைந்துள்ளதுடன் பேச்சுவார்த்தைகளுக்கான அனைத்து ஆயத்தங்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அணு ஆயுத வல்லமை மீதான நாட்டத்தை வடகொரியா கைவிடுவதோடு கையிருப்பில் இருக்கும் அணு ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பின் கீழ் அழித்து விட வேண்டும் எனும் நிபந்தனை அமெரிக்க தரப்பினால் முன் வைக்கப்படவுள்ள போதிலும் வடகொரியா, விரைவில் அதற்கு இணங்காது என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆயினும், புதிய உறவை நோக்கி நகர்வதாக வடகொரிய அரச தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ள நிலையில் 12ம் திகதி சிங்கப்பூரில் இரு தலைவர்களும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment