20ம் திருத்தச்சட்டம் 'தற்போது' அவசியமில்லை: விஜேதாச - sonakar.com

Post Top Ad

Monday, 11 June 2018

20ம் திருத்தச்சட்டம் 'தற்போது' அவசியமில்லை: விஜேதாச


தற்போதைய அரசியல் சூழ்நிலையில் 20ம் திருத்தச் சட்டம் அவசியமற்றது எனவும் அதனால் பாரிய அரசியல் குழப்பங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கிறார் விஜேதாச ராஜபக்ச.அண்மையில் அமைச்சராகப் பதவியேற்றது முதல் நாட்டின் முக்கிய விவகாரங்களில் சுதந்திரமாகத் தலையிட்டுக் கருத்துரைத்து வரும் விஜேதாச, மஹிந்த அரசின் ஊழல்வாதிகளைத் தண்டிப்பதற்குத் தடையாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு நீதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஜே.வி.பியினால் கொண்டு வரப்பட்டுள்ள 20ம் திருத்தச் சட்டம் தற்போதைய சூழ்நிலையில் அவசியமற்றது என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment