
ஜேர்மனி முஸ்லிம் ஹெல்பன் மற்றும் ஹசன் மௌலவி நற்பணி மன்றம் இணைந்து தோப்பூர், கிண்ணியா மற்றும் சூழவுள்ள பகுதிகளில் வாழும் வறிய குடும்பங்களுக்கு நோன்புப் பெருநாளை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
முதியவர்கள், சிறுவர்கள் உள்ளடங்களாக வறியு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2200 பேருக்கு இவ்வாறு புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக ஹசன் மௌலவி நற்பணி மன்றம் சார்பாக காலஞ்சென்ற ஹசன் மௌலவியின் புதல்வர் சாதிக் ஹசன் சோனகர்.கொம்முக்கு தெரிவித்தார்.
ரமழானுடைய ஆரம்பத்தின் போதும் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு உலர் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment